பாலைவனத்திருவிழா, ஜெய்சல்மேர்

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் சாம் மணற்குன்றுப் பகுதியில் பாலைவனத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இப்பகுதி ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 42 கி.மீ தூரத்தில் உள்ளது. இத்திருவிழாவில் சுற்றுலாப்பயணிகள் பலவிதமான கலை நிகழ்ச்சிகள், ஒட்டகப்பந்தயங்கள், தலைப்பாகை கட்டும் போட்டிகள், மீசைப் போட்டிகள் போன்றவற்றை கண்டு களிக்கலாம்.

இத்திருவிழாவானது ராஜஸ்தான் சுற்றுலாக்கழகத்தால் மூன்று நாட்களுக்கு நடத்தப்படுகிறது. துவக்கத்தில் இது அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக நடத்தப்பட்டது.

மேலும், கவர்ச்சியான உடலசைவுகளுடன் கூடிய புகழ்பெற்ற ‘கைர் அன்ட் ஃபையர்’ நடன நிகழ்ச்சி மற்றும் ஒட்டகச்சவாரி போன்றவை சுற்றுலா அனுபவத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றுகின்றன.

பயணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவ ஊர்திகள், நினைவுப்பொருள் அங்காடிகள் மற்றும் நடமாடும் வங்கிச்சேவைகள் போன்றவற்றை உள்ளூர் அரசு நிர்வாகம் விழாக்காலத்தில் ஏற்பாடு செய்வது குறிப்பிடத்தக்கது. தவிர, பெரும்பாலான கடைகளில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வசதிகளும் உள்ளன.

Please Wait while comments are loading...