Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்சல்மேர் » ஈர்க்கும் இடங்கள் » பாலைவன தேசிய பூங்கா

பாலைவன தேசிய பூங்கா, ஜெய்சல்மேர்

59

1980ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பாலைவன தேசியப்பூங்கா தார் பாலைவனப்பகுதியின் இயற்கைச்சமநிலையை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த தேசியப்பூங்கா 3161 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது.

இந்த பூங்காவின் நிலப்பரப்பானது ‘உப்பு ஏரி அடிவாரங்கள்’, மணற்குன்றுகள் மற்றும் பாறைகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இங்கு பயணிகள் பூனைப்பருந்து, பருந்து, புள்ளிக்கழுகு, ஆளிப்பருந்து, கழுகு, சிவப்பு வல்லூறு, புள்ளி வல்லூறு மற்றும் மணற் கௌதாரி போன்ற அதிசயமான பறவை வகைகளைக்கண்டு மகிழலாம்.ராஜஸ்தான் மாநிலத்தின் தேசியப்பறவையும், ஒரு அரிய வகைப்பறவையும் ஆன ‘கான மயில்’ அல்லது ‘காட்டு மயில்’ என்றழைக்கப்படும் பறவை இனம் இந்த தேசியப்பூங்காவை தன் இயற்கையான உறைவிடமாக கொண்டுள்ளது.

ராஜ்பௌக் ஏரி, மிலக் ஏரி மற்றும் பதம் தலாவ் ஏரி போன்றவை இந்த தேசியப்பூங்காவின் உள்ளேயே உள்ள நீர்ச்சேகரங்களாகும். இந்த தேசியப்பூங்காவை விஜயம் செய்வதற்கு ஏற்ற காலம் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் ஆகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed