ஹவேலி ஷீநாத் எனும் ஹவேலியானது 15ம் நூற்றாண்டில் வியாஸ் வம்சத்தாரால் கட்டப்பட்டுள்ள எழில்நிறைந்த ஒரு ஹவேலி மாளிகை ஆகும். ஒரு காலத்தில் இம்மாளிகை ஜெய்சல்மேர் பிரதான மந்திரியின் இருப்பிடமாக விளங்கியிருக்கிறது.
இம்மாளிகையின் கதவுகளில் காணப்படும் மரக்குடைவு வேலைப்பாடுகளும் அதில் பொருத்தப்பட்டுள்ள உலோக பிடிமானங்களும் கலையம்சத்துடன் கூடிய முக்கியத்துவத்தை கொண்டுள்ளன.
தற்சமயம் இம்மாளிகையின் ஒரு பகுதி அதற்கு உரிமையான ராஜவம்சாவளியினரின் வசிப்பிடமாகவும், மறுபகுதி ஒரு ‘ஹெரிடேஜ் ஹோட்டல்’ ஆகவும் பயன்பாட்டில் உள்ளது. இந்த ஹோட்டலில் வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு விருந்தினர்களுக்கு பாரம்பரிய ராஜரீக பாணியில் உபசரிப்பும் சேவையும் வழங்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications