ஜெய்சல்மேர் நாட்டுப்புறக்கலை அருங்காட்சியகம் காட்ஸிஸார் ஏரியில் கரையில் அமைந்துள்ளது. இது என்.கே.ஷர்மா அவர்களால் 1984ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் ஜெய்சல்மேரின் செழுமையான பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜெய்சல்மேர் நகரின் பரிணாம வளர்ச்சியை இங்குள்ள அருங்கலை பொருட்கள் மற்றும் புராதன சான்றுகள் மூலம் பயணிகள் அறிந்து கொள்ளலாம்.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஆறு பிரிவுகளில் அரிதான ஆபரணங்கள், புகைப்படங்கள், முடியலங்காரங்கள் மற்றும் ஆடை வடிவமைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications