ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் இந்த லோதுர்வா உள்ளது. பட்டி ராஜவம்சம் இந்த ஸ்தலத்தை தலைநகரமாகக் கொண்டு 1156ம் ஆண்டு வரை ஆட்சி செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
இங்குள்ள ஒரு புராதன ஜைன திருக்கோயில் முக்கியமான அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இது 23வது ஜைன தீர்த்தங்கரரான பர்ஷ்வாநாத் பஹவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் நல்ல நிலையில் காணப்படாவிட்டாலும் இதன் மஞ்சள் பாறைக்கல் கட்டமைப்பும் ராஜபுதன ஜாலி (சாளரம்) வேலைப்பாடும் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவர்கிறது. இதுதவிர இக்கோயிலில் தில்வாரா பாணி விதான அமைப்புகளையும் பயணிகள் பார்க்கலாம்.
இந்த தலத்தின் இதர முக்கியமான விசேஷங்களாக ஹிங்லஜ் மாதா கோயில், சாமுண்ட மாதா கோயில் மற்றும் ஒரு புராதன சிவன் கோயில் போன்றவற்றை குறிப்பிடலாம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த லோதுர்வா பண்டைய ‘தார் பாலைவன வணிகப்பாதை’யின் வழியில் அமைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications