ஜெய்சல்மேர் கோட்டை வளாகத்துக்குள் இந்த அரண்மனை அமைந்துள்ளது. இது ஜெய்சல்மேர் கோட்டை அரண்மனை அருங்காட்சியகம் மற்றும் பண்பாட்டு மையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஐந்து அடுக்குகளைக் கொண்ட இந்த அரண்மனை அதன் நுட்பமான அலங்கார வேலைப்பாடுகளைக்கொண்ட ஜன்னல்களுக்கும் பலகணிகளுக்கும் பிரசித்தமாய் அறியப்படுகிறது.
வெள்ளைப்பளிங்கு கற்களால் ஆன இந்த அரண்மனையின் இடதுபுற வாசல் ஒரு காலத்தில் மன்னர்கள் குடிமக்களை சந்திக்கும் இடமாக விளங்கியுள்ளது. இந்த அரண்மனையில் சுற்றுலாப்பயணிகள் வெள்ளி அரியாசனம், அரச கட்டில், பாத்திரங்கள், முத்திரைகள், பணம் மற்றும் ராஜ குடும்பத்தினரின் சிலைகள் போன்றவற்றை காணலாம்.
மேலும் இந்த அரண்மனை மேல் தளத்திலிருந்து ஒட்டுமொத்த ஜெய்சல்மேர் நகரத்தின் அழகையும் உச்சியிலிருந்து பார்த்து ரசிக்கலாம். காலையிலேயே இந்த அரண்மனைக்கு விஜயம் செய்தால் அதிகம் கூட்டமின்றி பார்த்து ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரண்மனை அக்டோபர் தொடங்கி மார்ச் மாதம் வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும், ஏப்ரம் முதல் செப்டம்பர் மாதம் வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications