ஜெய்சல்மேர் கோட்டைக்கு வெளியே உள்ள மானக் சௌக் மற்றும் ஹவேலிகள் மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். இந்த ஹவேலிகள் (கோட்டை மாளிகைகள்) அழகான கலை மற்றும் கைவினை வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. பட்வோன்-கி-ஹவேலி, சலீம் சிங் – கி –ஹவேலி மற்றும் நத்மல்ஜி-கி-ஹவேலி போன்றவை இங்குள்ள ஹவேலிகளில் புகழ்பெற்ற சின்னங்களாகும்.
இந்த ஒட்டுமொத்த பகுதியும் ஒரு ‘சதார் மண்டி’ என்றழைக்கப்படும் ஒரு சந்தையாகவும்(மார்க்கெட்) விளங்குகிறது. மிகப் பிரசித்தமான தானியச் சந்தையான இது ஒரு காலத்தில் ஈராக், எகிப்து, பெர்ஷியா மற்றும் அரேபியா போன்ற நாடுகளிலிருந்து வணிகர்கள் வந்து செல்லும் இடமாக இருந்திருக்கிறது.
இந்த மார்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் மானக் சௌக் எனும் இடம் அலங்கார தோல் பொருட்கள், சம்பிரதாய வெள்ளி ஆபரணங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் புராதன கலைப்பொருட்கள் போன்றவை விற்கப்படும் ஒரு பிரசித்தமான ஸ்தலமாகும். வெள்ளியில் கைவினைப்பொருட்கள் உள்ளூர் கைவினைக்கலைஞர்களால் உருவாக்கப்படுவதை இங்கு சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து மகிழலாம்.