ஜெய்சல்மேர் நகரின் மையப்பகுதியிலேயே இந்த நத்மல்ஜி-கி-ஹவேலி அமைந்துள்ளது. ராஜபுதன மற்றும் முகலாய அலங்கார பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இது தன் கட்டிடக்கலை அழகுக்காக புகழ் பெற்று விளங்குகிறது.
மஹரவால் பெரிசால் என்பவரால் திவான் மொஹாதா நாத்மால் என்பவருக்காக இது கட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகையின் முகப்பு அலங்காரத்தில் பறவைகள், யானைகள், பூக்கள், சைக்கிள்கள், நீராவி எஞ்சின்கள் மற்றும் போர்வீரர்களின் உருவங்கள் போன்றவை அடங்கியுள்ளன.
மேலும் பயணிகள் இந்த ஹவேலியின் சுவற்றில் கால்நடைகள், குதிரைகள் மற்றும் பூக்கள் போன்றவையும் பொறிக்கப்பட்டுள்ளதையும் காணலாம். ஜெய்சல்மேரிலிருந்து நடைப்பயணமாக அல்லது ரிக்ஷா மூலமாக பயணிகள் இந்த ஹவேலியை அடையலாம்.



Click it and Unblock the Notifications