பட்வா வளாகத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த பட்வோன்–கி–ஹவேலி ஜெய்சல்மேரின் முதல் ஹவேலி ஆகும். இந்த ஹவேலி தொகுப்பு வளாகத்துக்குள்ளேயே ஐந்து ஹவேலிகள் உள்ளடக்கியதாகும். இது குமான் சந்த் பட்வா என்பவரால் தன் ஐந்து மகன்களுக்காக கட்டப்பட்டிருக்கிறது.
இந்த மஞ்சள் மணற்பாறைகளால் ஆன மாளிகை அமைப்பை கட்டி முடிக்க 50 ஆண்டுகள் பிடித்ததாக சொல்லப்படுகிறது. தற்சமயம் இந்த ஹவேலியில் இந்திய தொல்லியல் துறை மற்றும் கலை கைவினைத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பயணிகள் ரிக்ஷா மூலம் ஜெய்சல்மேரிலிருந்து இந்த பட்வோன்–கி–ஹவேலிக்கு செல்லலாம்.



Click it and Unblock the Notifications