ஜெய்சல்மேர் ரயில் நிலையத்துக்கருகில் இந்த சலீம் சிங்-கி-ஹவேலி அமைந்துள்ளது. இந்த அழகிய கோட்டை மாளிகை சலீம் சிங் என்பவரால் 1815ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
இதன் முகப்பு வடிவமைப்பு கப்பலின் பின்புறம் போன்று அமைந்துள்ளதால் இது ஜஹாஸ்மஹால் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாளிகையின் கூரையானது விதான அமைப்புடன் மேலே உலைக்களம் போன்ற கோபுர அமைப்பை கொண்டிருக்கிறது. மேலும் கூரையில் மயிலைப்போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் பக்கவாட்டு சாரங்களை பயணிகள் காணலாம்.சலீம் சிங்-கி-ஹவேலி கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து மேத்தா குடும்பத்தினர் அதில் வசித்து வருகின்றனர். இம்மாளிகையில் 38 பலகணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஹவேலியின் வாயில்பகுதியை யானைகள் காவல் காக்கின்றன. பயணிகள் ரிக்ஷா மூலம் ஜெய்சல்மேரிலிருந்து இந்த ஹவேலிக்கு செல்லலாம்.



Click it and Unblock the Notifications