ஐந்து அடுக்குகளால் ஆன இந்த டாசியா டவர் ஜெய்சல்மேர் நகரத்தில் பாதல் அரண்மனை வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ளது. முஸ்லிம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னம் ராஜா ‘மஹரவால் பெரிசால் சிங்’ கிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த கோபுர அமைப்பின் கட்டிடக்கலை பாணியானது முகர்ரம் பண்டிகையின்போது எடுத்துச்செல்லப்படும் டாசியா (கர்பாலாவில் பின்பற்றப்பட்ட சடங்கு) எனும் மூங்கில் அல்லது மரத்தால் ஆன புனிதப்பொருளை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டாசியா கோபுரம் அதன் அழகான அலங்கார வடிவமைப்புகள், குமிழ் கோபுரங்கள் மற்றும் ராஜபுதன முகலாய கூட்டு அம்சங்களுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. இமாம்களின் சமாதி மண்டப அமைப்பினை இது ஒத்திருக்கிறது.
இந்த நினைவுச்சின்னத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் பலகணிகள் ஒவ்வொரு விதமாக, தனித்துவத்துவமான கட்டிடக்கலை அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருப்பதை பயணிகள் காணலாம்.



Click it and Unblock the Notifications