புஜியோ கொத்தோ எனும் இந்த சுவாரசியமான சுற்றுலா அம்சம் லகோடா குளத்தின் கரையில் அமைந்திருக்கிறது. ஐந்து அடுக்குகளை கொண்ட வரலாற்றுக்கட்டிடமான இது எதிரிகள் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக கட்டப்பட்டிருக்கிறது.
இந்த மாளிகையின் முதல் தளத்தின் சுவர்களில் துளைகள் இடப்பட்டு அவற்றில் துப்பாக்கிகள் பொதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக உள்ள தளத்தில் ஒரு நீர்ச்சேகர அமைப்பு காணப்படுகிறது.
மாளிகையின் உச்சிப்பகுதியில் மயில் உருவத்தைக்கொண்ட அலங்கார அமைப்பு நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. புஜியோ கொத்தோ மாளிகையின் உச்சியிலிருந்து ஜாம்நகரின் நகரக்காட்சிகளை நன்றாக பார்த்து ரசிக்க முடியும் என்பது மற்றொரு சிறப்பம்சம்.
காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications