குஜராத் ஆயுர்வேதா பல்கலைக்கழகம் எனும் இந்த பல்கலைக்கழகம் குஜராத் மாநிலத்தில் 1967ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமையான பல்கலைக்கழகமாகும். இது இந்திய மருத்துவ பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டிருக்கிறது.
ஆயுர்வேத முறைக்கு அப்போதைய நவாநகர் ஆட்சியாளர்கள் அளித்த ஆதரவோடு துவங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தற்போது பல்வேறு துறைகள் மற்றும் பட்டப்படிப்புகளை கொண்டிருக்கிறது.
வெளி நாட்டு மாணவர்களுக்கும் குறுகிய மற்றும் நீண்ட கால படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழக வளாகத்திலேயே மருத்துவமனை மற்றும் மூலிகைத்தோட்டம் ஆகியனவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications