சோலாரியா என்பது சூரியக்குளியல் செய்வதற்காக அமைக்கப்படும் கண்ணாடி அறை அமைப்பாகும். ஃப்ரான்ஸ் நாட்டில் இது போன்ற மற்ற இரண்டு சோலாரியம் அமைப்புகள் உலகப்போரின் போது அழிக்கப்பட்டு விட்டன.
எனவே ஜாம்நகரில் உள்ள இந்த சோலாரியம் உலகத்தில் உள்ள ஒரே ஒரு சோலாரியமாக புகழ் பெற்றுள்ளது. இந்த சோலாரியம் அமைப்பில் ஒரு சுழல் கோபுர அமைப்பு பொருத்தப்பட்டிருக்கிறது.
காச நோய், மூட்டுநோய் மற்றும் தோல் வியாதிகள் உடையவர்கள் இதில் அமரவைக்கப்பட்டு வெயில் நாள் முழுக்க படும்படியாக இந்த சுழல் அமைப்பு சுழற்றப்படும்.
இருப்பினும் இந்த சிகிச்சை முறையை இயக்கி வந்த மருத்துவர் 1996ம் ஆண்டு இறந்தபின் இந்த சோலாரியம் அல்லது ரஞ்சித் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலி ரேடியோ தெரபி எனும் மருத்துவ சிகிச்சை மையம் மூடப்பட்டுவிட்டது.



Click it and Unblock the Notifications