Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜௌன்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ஷாகி குயிலா

ஷாகி குயிலா, ஜௌன்பூர்

19

ஷாகி குயிலா (ராஜ கோட்டை) அல்லது கரார் கோட்டை அல்லது ஜௌன்பூர் கோட்டை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த புராதன கோட்டை விரிவானதொரு வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ளது.

இதன் ஆதி வடிவம் ஒரு மண்முகடின் மீது கட்டப்பட்டு கெர்ரார் கோட்டை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் இது இப்ராஹீம் நாயிப் பர்பக் என்பவரால் மறுகட்டுமானம் செய்யப்பட்டிருக்கிறது. இவர் 1376-77ம் ஆண்டுகளில் ஃபிரோஸ் ஷா மன்னரின் தளபதியாக இப்பகுதியை ஆண்டுள்ளார்.

பிரசித்தமான ஷாஹி பாலத்திற்கு அருகிலேயே இந்த ஷாகி குயிலா கோட்டையும் அமைந்திருக்கிறது. இந்த கோட்டை கட்டுவதற்கான பொருட்கள் அனைத்தும் கனோஜ் ரத்தோர் வம்ச மன்னர்களின் அரண்மனைகளையும் கோயில்களையும் சூறையாடி பெறப்பட்டவையாகும்.

பின்னர் 100 வருடங்களுக்குப்பின் இந்த நகரத்தை துக்ளக் வசத்திடமிருந்து கைப்பற்றிய லோடி வம்ச அரசர்கள் இந்த கோட்டையை சிதைத்துவிட்டனர். அவர்களுக்குப்பின் முகலாய அரசர்கள் ஹுமாயூன் மற்றும் அக்பரது காலத்தில் இந்த கோட்டை மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

வரலாற்றுக்காலத்தின் இறுதியில் ஆங்கிலேயப்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த கோட்டை திரும்பவும் 1857ம் ஆண்டில் நிகழ்ந்த சுதந்திரப்புரட்சியின் போது சேதமடைந்துவிட்டது.

ஜௌன்பூர் நகரத்திலிருந்து 2.2 கி.மீ தூரத்திலுள்ள இந்த கோட்டை தற்போது ஜௌன்பூர் நகரத்தின் மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக வீற்றிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu