ஜஜ்ஜார் மாவட்டத்தின் பேரி நகரில் அமைந்துள்ளதால் பேரி மந்திர் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இங்கு பீமேஷ்வரி தேவியின் திருவுருவச்சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புராணங்களின் படி, கிருஷ்ண பகவான் பீமனை அழைத்து, போரில் வெற்றி பெற வேண்டுமெனில் அவர்களின் குலதெய்வமாகிய குல்தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும் என்றும், அதற்காக குருக்ஷேத்திரா போர்க்களத்துக்கு தேவியைக் கொண்டு வருமாறும் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, பீமன் தேவியின் உறைவிடமான கிங்லே மலையை அடைந்து, போர்க்களத்துக்கு தன்னோடு வரும்படி வேண்டினான்.
தேவியும் அவனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, தன்னை கீழே தவற விட்டு விடாது, அவனது மடியில் அமர்த்தி கூட்டிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையோடு உடன் வர சம்மதித்தார்.
மாவீரனாகிய பீமன் அவ்வாறு அவரை மடியில் ஏந்தி கூட்டிச் செல்லும் போது, அவனுக்கு உடனடியாக இயற்கை உபாதை கழிக்க வேண்டிய அவஸ்தை ஏற்பட்டது. அதனால், அவன் தேவியை ஒரு பேரி மரத்தின் கீழ் இருத்தி விட்டுச் சென்றான்.
அவன் திரும்பி வந்து அழைத்த போது, தேவி அவன் தனது உறுதிமொழியை மீறியதாகக் கூறி அவனோடு செல்ல மறுத்து விட்டார். அந்த மரத்தடியிலேயே அமர்ந்து கொண்டு, அவனை திருப்பி அனுப்பியும் விட்டார்.
மஹாபாரதப் போர் முடிவடைந்த போது, கௌரவர்களின் தாயாராகிய காந்தாரி, இந்த பேரி மரத்தை கடந்து சென்ற போது, இங்கு இக்கோயிலைக் கட்டியுள்ளார்.
இக்கோயில் இப்பெயரில் அழைக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இக்கோயிலின் சுவாரஸ்யமான அம்சம் யாதெனில், திருமணமான தம்பதியர்கள் இங்கு வந்து அம்மனை சாட்சியாக வைத்து மீண்டும் மங்கல நாண் கட்டிக் கொள்கின்றனர்.