Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜான்ஸி » ஈர்க்கும் இடங்கள் » செயின்ட் ஜியூட்ஸ் தேவாலயம்

செயின்ட் ஜியூட்ஸ் தேவாலயம், ஜான்ஸி

22

ஜான்ஸியின் சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜியூட்ஸ் தேவாலயம் கத்தோலிக்க கிறித்துவர்கள் கூடும் பிரபல ஸ்தலமாகும். செயின்ட் ஜியூட்ஸ் தாட்டேயியஸ் அவர்களின் எலும்பு, இதன் அஸ்திவாரத்தில் புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த தேவாலயம், 1966 ஆம் ஆண்டு நிறுவட்டுள்ளது. தன்னுடைய சக மதவாதிகளோடு இங்கு வந்து பிரார்த்தனை செய்த, காலஞ்சென்ற பிஷப் எஃப்எக்ஸ் ஃபெனெச் அவர்கள் தான் இங்கு பிரார்த்தனை செய்ய ஆரம்பித்த முதல் நபர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

பின்னர் அவரைத் தொடர்ந்து பலர் இங்கு பிரார்த்தனை செய்துள்ளனர். கால ஓட்டத்தில் சொட்டு சொட்டாக வடியும் நீரைப் போன்றிருந்த பக்தர்களின் வருகை, ஓடையென மாறி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தொலைவான பகுதிகளிலிருந்தும் அருகாமையில் உள்ள பகுதிகளிலிருந்தும் கத்தோலிக்க அன்பர்கள் இந்த தேவாலயத்திற்கு வருகை தந்து இந்த மகாத்துறவியின் புனித நினைவுச்சின்னத்தை வழிபட்டுத் திரும்புகின்றனர்.

இந்த தேவாலயத்தில், ஒரு வார காலம் வரை கொண்டாடப்படும் திருவிழாவானது அக்டோபர் 28 ஆம் தேதியில் உச்ச நிலையை அடைகிறது. இந்த நாள் செயின்ட் ஜியூட்ஸ் விருந்தளிப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த விசேஷத்தின் குறியீடாக ஊர்வலம் ஒன்றும் நடத்தப்படுகிறது. கிறித்துவ மற்றும் இந்து கட்டுமான பாணிகளின் கலவையாகக் கட்டப்பட்டுள்ள இத்தேவாலயம் கிறித்துவர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினரையும் ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 May,Sun
Return On
25 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 May,Sun
Check Out
25 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 May,Sun
Return On
25 May,Mon