Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜின்ட் » வானிலை

ஜின்ட் வானிலை

மார்ச் முதல் நவம்பர் மாதங்களில் ஜின்ட்-ன் பருவநிலை வெப்பமாகவும் மற்றும் வறட்சியாகவும் இருக்கும். எனினும், முக்கியமான புனிதத்தலமாக இருக்கும் ஜின்ட் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் திருவிழாக்காலங்களில் பெருமளவு படையெடுப்பார்கள்.

கோடைகாலம்

ஜின்ட்-ல் கோடைக்காலம் இருக்கும் மார்ச் முதல் ஜுன் மாதங்களில் வெப்பநிலை சுமார் 45°C அளவிலும், மிகவும் வெப்பமான காற்றும் வீசும்.

மழைக்காலம்

ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலத்தில் ஜின்ட் நகரத்தில் கனமான மற்றும் தொடர்ச்சியான மழைப்பொழிவு நீடித்திருக்கும். இந்நாட்களில் ஜின்ட் ஈரப்பதமாக காணப்படும்.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் நிலவும் குளிர்காலத்தில் ஜின்ட் மாவட்டம் 12°C முதல் 20°C அளவிலான வெப்பநிலையுடன், மிதமான மற்றும் மகிழ்ச்சியான பருவநிலையை கொண்டிருக்கும். ஜனவரி மாதத்தில் சற்றே அதிகமான பனிமூட்டத்துடன் ஜின்ட் நகரம் இருப்பதால் அந்நாட்களில் விமானங்கள் மற்றும் இரயில்கள் இரத்து செய்யப்படுவதும் நிகழ்கிறது.