Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோக் நீர்வீழ்ச்சி » வானிலை

ஜோக் நீர்வீழ்ச்சி வானிலை

ஜோக் நீர்வீழ்ச்சி ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களின் இடைப்பட்ட காலங்களில் ரெட்டிப்பு அழகுடன் காட்சியளிப்பதால் இந்த காலங்களில் ஜோக் அருவிக்கு சுற்றுலா வருவது சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் மே வரை) : ஜோக் நீர்வீழ்ச்சியின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 40 டிகிரியும், குறைந்தபட்சமாக 22 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : ஜோக் நீர்வீழ்ச்சியின் மழைக் காலங்களில் அதிக அளவில் மழை பொழிவு இருக்கும். இதனால் இந்தக் காலங்களில் ஜோக் நீர்வீழ்ச்சி மிக அழகாகவும், கம்பீரமாகவும் தோற்றம் அளிப்பதால் பயணிகள் அருவியின் அழகை பருக மழைக் காலங்களில் வருவது சிறப்புடையதாக அமையும்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் டிசம்பர் வரை) : ஜோக் நீர்வீழ்ச்சியின் குளிர்ச்சியான பனிக் காலங்களில் 10 டிகிரி முதல் 28 டிகிரி வரை வெப்பநிலை நிலவும்.