Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கல்பா » வானிலை

கல்பா வானிலை

ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை நீண்டிருக்கும் கோடைகாலங்களில் கல்பாவிற்கு வருவது நல்லது. மிதமான வெப்பநிலையுடன், வெளியில் சுற்றுவதற்கு ஏற்றதாக அமைந்த சீதொஷ்ணநிலையுடன் இருப்பதால் கோடை காலத்தில் சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்தின் கண்கவரும் அழகை ரசித்திட முடியும்.

கோடைகாலம்

கல்பாவில் கோடைகாலம் ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை இருக்கும். இந்த மாதங்களில் கல்பாவின் வெப்பநிலையில் அதிகபட்ச அளவாக 30 டிகிரியும், குறைந்தபட்ச அளவு 8 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கோடைகாலத்தில் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மெல்லிய கம்பளி ஆடைகளை எடுத்து வருவது உகந்தது.

மழைக்காலம்

ஜுலை முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக்காலங்களில் கல்பா பகுதியில் பெய்யும் மழைப்பொழிவு கணிக்க முடியாததாக இருக்கும். இந்த சமயங்களில் வெப்பநிலை மிதமானதாக இருக்கும். இந்த காலகட்டங்களில் கல்பா வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஏற்ற உபகரணங்களை கொண்டு வருதல் நலம்.

குளிர்காலம்

அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நீடித்திருக்கும் குளிர்காலங்களில் கல்பாவின் பருவநிலை மிகவும் குளிரானதாக இருக்கும். இந்த காலகட்டங்களில் வெப்பநிலையானது -10 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து போய் விடுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிர்காலத்தில் இவ்விடத்திற்கு வராமல் இருப்பது நல்லது. இந்த காலத்தில் இங்கு பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் ஆகும்.