காவிரி நதியின் வடக்கு கரையோரத்தில் கஞ்சனூரின் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது கும்பகோணத்தில் இருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.
இக்கோவில் வெள்ளி கிரத்திற்கு (சுக்ர தேவன்) அர்ப்பணிக்கப்பட்டதாகும். இது 9 நவக்கிரக கோவில்களில் 6வது நவக்கிரக ஸ்தலம் ஆகும். இக்கோவிலின் முக்கிய தெய்வங்கள் சிவனும் பார்வதியும். இதில் சிவபெருமான் இங்கே அக்னீஸ்வரர் வடிவத்திலும், பார்வதி கற்பகாம்பாள் வடிவத்திலும் பக்தர்களால் வணங்கப்படுகிறார்கள்.
ஒருவருடைய ஜாதகத்தின் காரணமாக சுக்கிரன் அல்லது வெள்ளி கிரகம் அவர்களுக்கு தீங்கு இழைக்காதபடி, பரிகாரங்கள் செய்வதற்காக இங்கே திரளான மக்கள் கூடுகின்றார்கள்.
சிவனும் பார்வதியும் இவ்விடத்தில் திருமணம் செய்வதை பிரம்மா தன் கனவில் கண்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்விடத்தில் அக்னீ சிவபெருமானை குறிப்பதால், அக்னீஸ்வரர் என்கிற பெயர் உருவானது.
பிரம்மதேவன் வழிபட்ட பிரம்ம லிங்கம் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சிவபெருமானே இங்கு சுக்ரனாக இருப்பதாக கூறப்படுவதால், இங்கே சுக்ரனுக்கு என்று ஒரு தனிப்பட்ட சந்நிதி இல்லை.
அக்னீஸ்வரர் கோவிலில் 2 பிரகாரங்கள் இருக்கின்றன. காளிகாமர் மற்றும் மனகஞ்சரரர் ஆகியவை இவ்விடத்தின் மற்ற தளங்கள் ஆகும். விஜயநகர் மற்றும் சோழர் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளையும், சிவகாமி மற்றும் நடராஜர் சிலைகளையும் இக்கோவிலில் காணலாம். நடராஜர் சபாவை முக்தி மண்டபம் என்று அழைப்பார்கள்.



Click it and Unblock the Notifications