கர்நாடகாவில் உள்ள தலைக்காவிரியில் இருந்து உருவாகும் காவிரி, 765 கிலோமீட்டர் தூரம் நீளமானது. இந்த நதிக்கு பல கிளைகள் இருக்கின்றன. இது பெரும்பாலும் தமிழகத்தின் ஊடாகவே பாய்ந்து ஓடுகின்றது.
சிம்சா, அமராவதி, நொய்யல், பவானி ஆகியவை காவிரி நதியின் முக்கிய கிளைகள் ஆகும். இந்த நதியின் மூலமாக பிரம்மாண்டமான நீர்மின்நிலைய செயற்திட்டங்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.
இந்துக்களால் இந்த நதி புனிதமானதாக கருதப்பட்டு, பல்வேறு சடங்குகளும் சம்பிரதாயங்களும் அவர்களால் இங்கு நிகழ்த்தப்படுகின்றன. தமிழகத்தில் இருக்கும் 9 நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான கஞ்சனூர் காவிரியின் வடக்கு கரையோரத்தில் அமைந்து இருக்கிறது.



Click it and Unblock the Notifications