மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் இங்கு கோடைக்கால மாதங்களாக உள்ளன. இக்காலத்தில் அதிகபட்ச வறட்சியும் வெப்பநிலையும் காணப்படுகிறது. எனவே கோடைக்காலம் காங்கேர் மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக இல்லை.
ஜுன் முதல் செப்டம்பர் வரை இப்பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. மழைக்காலத்தில் இங்கு மிதமான மழைப்பொழிவு நிலவுகிறது. வெப்பநிலை குறைந்து காணப்படுவதால் இந்த பருவத்தில் காங்கேர் மாவட்டம் சற்றே இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது.
டிசம்பர் மாதத்தில் துவங்கி பிப்ரவரி இறுதி வரை இங்கு குளிர்காலம் நீடிக்கிறது. குளிர்காலத்தில் 10°C க்கும் கீழே வெப்பநிலை குறைவதால் குளிருக்கான உடைகளுடன் பயணம் மேற்கொள்வது சிறந்தது.