Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கான்பூர் » வானிலை

கான்பூர் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் மாதங்கள் வரையிலும் கான்பூருக்கு வருவது மிகச் சிறந்த சுற்றுலா அனுபவத்தைக் கொடுக்கும். வட இந்தியாவின் பிற இடங்களைப் போலவே, கான்பூர் கோடைக்காலத்தில் மிகவும் வெப்பமாக, வறண்டு போய் மற்றும் புழுதியுடன் காணப்படும்.

கோடைகாலம்

சூடான மற்றும் வறண்ட காற்றுடன், மிகவும் கடுமையாக இருக்கும் கோடைக்காலம், கான்பூரில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் முடியும் வரையிலும் இருக்கும். இந்நாட்களில் வெப்பநிலை 45°C வரை சென்று விடும்.

மழைக்காலம்

ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலங்களில் அவ்வப்போது மழை வந்து கொண்டே இருக்கும் இடமாக கான்பூர் உள்ளது. இந்நாட்களில் பருவநிலை ஈரப்பதமாக இருக்கும்.

குளிர்காலம்

கான்பூரின் குளிர்காலம் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரையில் நீடித்திருக்கும். இந்நாட்களில் 12°C முதல் 20°C வரையில் மட்டுமே வெப்பநிலை இருப்பதால், பருவநிலை சற்றே மகிழ்வூட்டக் கூடியதாக இருக்கும். கான்பூரில் ஜனவரி மாதங்களில் கடுமையான மூடுபனி எழும் வாய்ப்புகள் இருப்பதால், அந்நாட்களில் விமானங்கள் மற்றும் இரயில்கள் இரத்து செய்யப்படுவதும் நடக்கிறது.