கீழ காசக்குடி காரைக்காலில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள இடமாகும். காரைக்கால் மாவட்டத்தின் வட பகுதியில் இருக்கும் இந்த இடம் அதன் வரலாற்று சின்னங்களுக்காக மிகவும் அறியப்படுகிறது.
1879-ஆம் ஆண்டு எம்.ஜே.டெலாஃபான் என்பவர் இந்த கிராமத்தில் தான் புகழ் பெற்ற செப்புத்தகடுகளை கண்டறிந்தார். இந்த கிராமத்தின் மையத்தில் உள்ள இரண்டாம் நந்திவர்மன் சின்னம், இங்கு பல்லவர்கள் வளமுற செய்த ஆட்சி முறையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இன்னமும் தாங்கி நின்று கொண்டிருக்கிறது.
இங்கிருக்கும் பழமையான சிவன் கோவில் மற்றுமொரு முக்கியமான சுற்றுலா, புனித தலமாகும். வரலாறு மற்றும் கலாச்சாரத்தை தெளிவாக அறிய முற்படும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வந்து செல்ல வேண்டிய இடமாக கீழ காசக்குடி இருக்கிறது.



Click it and Unblock the Notifications