Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காரைக்கால் » வானிலை

காரைக்கால் வானிலை

காரைக்கால் வருவதற்கு மிகவும் நல்ல சீசனாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தைச் சொல்லலாம். இந்த நாட்களில் விழும் சிறு மழைச்சாரல்கள் பருவநிலையை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றிவிடும். மழைப்பொழிவு, நாம் நனைந்து அனுபவிக்க ஏற்றதாக இருக்குமேயொழிய, பயப்படுத்தும் அம்சமாக இருக்காது. எனவே மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவை காரைக்காலின் மணற்கடற்கரைகள் மற்றும் கண்கவரும் கட்டிடக்கலையைக் காண மிகவும் ஏற்ற காலநிலைகளாகும்.

கோடைகாலம்

கோடைக்காலங்களில், தன்னை சுற்றியுள்ள தமிழ் நாட்டின் பிற பகுதிகள் போலவே காரைக்காலும் மிகவும் வெப்பமாகவும், வறட்சியாகவும் காணப்படும். கோடைகால வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸில் இருந்து, 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். எனவே மிகவும் அசௌகரியமான கோடை காலங்களில் காரைக்கால் வருவது நல்லதன்று. எனினும், மே மற்றும் ஜுன் மாதங்களில் காரைக்கால் கோவில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

மழைக்காலம்

அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் காரைக்கால் மிதமான மழையைப் பெறும் இடமாக உள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் மிகவும் அதிகமான மழைப்பொழிவை காரைக்கால் பெறும். எனவே, சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து விடுதலை அளிக்கும் கருவியாகவே மக்கள் இதனை பார்ப்பார்கள். எனவே, மழைக்காலம் என்பது காரைக்கால் நகரத்தை சுற்றிப் பார்க்க மிகவும் ஏற்ற காலம் ஆகும்.

குளிர்காலம்

குளிர்காலங்களில், அதாவது மழை முடிந்து வெப்பநிலை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் நாட்களில் காரைக்கால் நகரத்தை சுற்றிப்பார்க்க வருவது சிறந்த அனுபவங்களைத் தரும். குளிர்காலத்தில் காரைக்காலின் வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். எனவே காரைக்காலை சுற்றிப் பார்ப்பதற்கும், அதன் கடற்கரைகளில் நடந்து செல்வதற்கும் ஏற்ற பருவம் குளிர்காலம் தான். இந்த நாட்களில் தான் பெருவாரியான சுற்றுலாப் பயணிகள் மற்றும் அருகிலுள்ள நகரத்தைச் சேர்ந்தவர்கள் காரைக்கால் நகரத்திற்கு சுற்றுலா வருவார்கள்.