காரைக்கால் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் இருக்கும் மேல காசக்குடி கிராமம் இம்மாவட்டத்தின் புகழ் பெற்ற கிராமங்களில் ஒன்றாகும். இந்த கிராமம் காரைக்கல்-நெடுங்காடு செல்லும் வழியில் அமைந்துள்ளது.
12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவிலுக்காக இந்த கிராமம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. மாநில அரசாங்கத்தால் பழமையான நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்த கோவில், அதன் கற்குடைவுகள், வெளிப்பகுதி மற்றும் உட்புற அழகு ஆகியவற்றால் காண்பவரை கண்டிப்பாக ஈர்த்து விடும்.
இந்த கிராமத்திற்கு நீங்கள் வரும் போது, மற்றுமொரு கோவிலான நாகானந்தர் கோவிலுக்கும் சென்று வரலாம். திருவாதிரை, வைகுண்ட ஏகாதாசி, மாசிமகம் மற்றும் சித்திரை பூர்ணிமா திருவிழா காலங்களில் மேல காசக்குடி கிராமம் பெருவாரியான சுற்றுலாப் பயணிகளை கவர்திழுக்கிறது.
மதம் மற்றும் வரலாற்று சின்னங்களுக்காக புகழ் பெற்று விளங்கும் இந்த கிராமம் புனிதப்பயணிகள் மற்றும் சுற்றுலா வருபவர்கள் என அனைவருக்கும் ஏற்ற இடமாகும்.



Click it and Unblock the Notifications