காரைக்காலில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கைலாசநாதர் கோவில், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டு, எட்டாவது நூற்றாண்டில் பல்லவர்களால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட இடமாகும்.
புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு எதிரிலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. பிரெஞ்சு அரசின் ஆட்சிக் காலத்திலும் இந்த கோவில் மீண்டும் கட்டப்பட்டு புணரமைக்கப்பட்டது.
கைலாசநாதர் கடவுள் மற்றும் சௌந்தராம்பாள் அம்மை ஆகியோருக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோவிலின் முக்கியமான கவர்ச்சி அம்சமாக இதன் நான்கு பெரிய கதவுகளைச் சொல்லலாம். இந்த கோவிலின் நுழைவாயிலில், மேற்கு திசையைப் பார்த்தபடி சுப்ரமணிய கடவுள் வைக்கப்பட்டிருக்கிறார்.



Click it and Unblock the Notifications