காரைக்கால் நகருக்கு அருகில் இருக்கும் விமான நிலையமாக திருச்சி உள்நாட்டு விமான நிலையம் அறியப்படுகிறது. திருச்சி விமான நிலையம், சென்னை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 300 கிமீ தூரத்தில் உள்ள சென்னை விமான நிலையம் காரைக்காலுக்கு மிகவும் அருகில் உள்ள சர்வதேச விமான நிலையமாகும். இங்கிருந்து காரைக்கால் செல்வதற்கு பஸ்களும், டாக்ஸிகளும் எளிதில் கிடைக்கும். பயண நேரம் 7 முதல் 9 மணி நேரங்களாக இருக்கும்.