Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காரைக்குடி » வானிலை

காரைக்குடி வானிலை

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டமே, இங்கு செல்வதற்கு உகந்த காலகட்டமாகும். இச்சமயத்தில், இங்கு குளிர்காலம் நிலவுவதால், வானிலை மிதமான குளிர்ச்சியுடன், சுற்றிப்பார்ப்பதற்கும், பயணம் செய்வதற்கும் ஏற்றவாறு இனிமையாக இருக்கும். ஒரு சுற்றுலாத் தலத்திலிருந்து இன்னொரு தலத்திற்கு, சூரிய வெப்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல், எளிதாக போய் வர முடியும். மேலும், இம்மாதங்களில், காற்றில் ஈரப்பதத்தின் அளவும் குறைவாகவே இருக்கும்.         

கோடைகாலம்

காரைக்குடியில், கோடைகள் வெப்பமாகவும், ஈரப்பதத்துடனும் காணப்படுகின்றன. கோடைகாலம், மார்ச் மாதத்தில் ஆரம்பித்து, ஜூன் மாத நடுப்பகுதி வரையிலான, நான்கு மாதங்கள் வரை நீடிக்கிறது. மதிய வேளைகள் சுட்டெரிக்கும் வெப்பத்துடனும், புழுக்கத்துடனும் இருக்கும். ஆனால், சாயந்தர வேளைகள் ஓரளவு இனிமையாகவே இருக்கும்; ஆனால், இளந்தென்றல் காற்று வீசவில்லையெனில், இவ்வேளைகளும், புழுக்கமாக இருக்கும். இக்காலத்தில், காரைக்குடிக்கு பயணம் மேற்கொள்வது உசிதமல்ல.   

மழைக்காலம்

காரைக்குடியில், ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்கள் மழைக்கால மாதங்களாகும். காற்று வீசுவதைப் பொறுத்து, இப்பகுதியில் செப்டம்பர் மாத நடுப் பகுதி வரை மழை பெய்யக்கூடும். இக்காலத்தில், இங்கு மிதமானது முதல் கடும் மழை வரை பெய்யும். இந்த மூன்று மாதங்களிலும், இங்குள்ள தட்பவெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து, காற்றில் ஈரப்பதம் மற்றும் பனியின் அளவு அதிகரிக்கும்.

குளிர்காலம்

குளிர்காலம், நவம்பர் மாதக் கடைசி அல்லது டிசம்பர் மாதத் தொடக்கத்தில் ஆரம்பிக்கிறது. ஆனால், காரைக்குடி எப்போதும் அதீத குளிருடன் இருந்ததில்லை. இச்சமயத்தில், இங்கு தட்பவெப்பநிலை, கட்டாயமாகக் குறைந்து, சூரியனின் தகிப்பு, தாங்கிக்கொள்ளக்கூடிய அளவிலேயே இருக்கும். ஆனால், கனமான கம்பளிகள் தேவைப்படும் அளவுக்கு குளிர் இருக்காது. மெல்லிய ஜாக்கெட்டுகள் அல்லது சால்வைகள் மட்டுமே இரவின் குளிரை சமாளிக்க போதுமானதாகும்.