முன்குளிர்காலம் தொடங்கி வசந்தகாலம் வரை, அதாவது செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான இடைப்பட்ட பருவம் குளுமையுடனும் மற்றும் இனிமையான சூழலுடனும் காணப்படுவதால் இது கரவ்ளி பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்ற பருவமாகும். மேலும் பிப்ரவரி மாதத்தில் காய்லா தேவி கோயில் ஸ்தலத்தில் கொண்டாடப்படும் ஆன்மீகத் திருவிழாவின் போது ஏராளமான பயணிகள் இங்கு கூடுவதும் குறிப்பிடத்தக்கது.
(ஏப்ரல் முதல் மே மாதம் வரை): கடுமையான வெப்பம் நிலவும் கோடைக்காலத்தில் கரவ்ளி பிரதேசத்தில் அதிகபட்சமாக 47° C வரையிலான வெப்பநிலையைப் பெறுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 ° C காணப்படுகிறது. குறிப்பாக மே மாதத்தில் அதிக வெப்பநிலை நிலவுகிறது. இக்காலத்தில் கரவ்ளிக்கு விஜயம் செய்வதை பயணிகள் தவிர்ப்பது நல்லது.
(ஜுன் முதல் செப்டம்பர் வரை): ஜுன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக்காலத்தில் மிதமான மழைப்பொழிவையே கரவ்ளி பிரதேசம் பெறுகிறது. இது இப்பகுதியின் வெப்பத்தை ஓரளவு தணிக்கிறது.
(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): குளுமையான பருவநிலை நிலவும் இக்காலத்தில் கரவ்ளி பிரதேசம் குறைந்தபட்சம் 8° C முதல் அதிகபட்சம் 28° C வரையிலான வெப்பநிலையுடன் காட்சியளிக்கிறது. குளிர்காலம் கரவ்ளிக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.