Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்ணால் » வானிலை

கர்ணால் வானிலை

ஹரியானாவின் மற்ற நகரங்கள் மற்றும் வட இந்தியப்பகுதிகளைப் போன்றே கர்ணால் நகரமும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையில் மிதமான இனிமையான பருவநிலையை கொண்டுள்ளது.

கோடைகாலம்

மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நிலவுகிறது. சில சமயம் ஜுன் வரை கூட கோடைக்காலம் நீடிக்கக்கூடும். சராசரியாக 22°C  முதல் 40°C  வரை வெப்பநிலையை இப்பகுதி பெறுகிறது. வெப்பமான வறண்ட காற்றுகள் கோடைக்காலத்தில் வீசும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மழைக்காலம்

ஜுலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. மழைக்காலத்தில் கடுமையான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது.  மேலும் ஈரப்பதம் மற்றும் இறுக்கமான சூழல் ஆகியவற்றோடு பொதுவாக மேகமூட்டத்துடனும் கர்ணால் நகர்ப்பகுதி காட்சியளிக்கிறது.

குளிர்காலம்

நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி வரை குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் வெப்பநிலை 12°C  தொடங்கி  20°C  வரை நிலவுகிறது.