சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையும் வகையில் கர்னாலா அமைந்துள்ளது. இது மும்பை நகரத்திலிருந்து 52 கி.மீ தூரத்திலும் பான்வெல் நகரத்திலிருந்து 14 கி.மீ தூரத்திலும் உள்ளது. பான்வெல் நகரத்திலிருந்து கோவா நெடுஞ்சாலை வழியாக கர்னாலாவை அடையலாம். மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் கர்னாலா நகரத்துக்கு இயக்கப்படுகின்றன.