Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கத்கோடம் » வானிலை

கத்கோடம் வானிலை

பனிக்காலத்தில் வெப்பநிலை மிதமாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதால் கத்கோடம் செல்ல சிறந்த காலம் பனிக்காலமாகும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இவ்விடத்தை ரசிக்க ஏதுவானதாக உள்ளது.

கோடைகாலம்

(ஜூன் - ஏப்ரல்): ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் கோடை ஆரம்பித்து ஜூன் வரை நீடிக்கும். இக்காலத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை  30 ° C மற்றும் 15 ° C இடையில் பபதிவாகும்.

மழைக்காலம்

(செப்டம்பர் - ஜூலை): கத்கோடத்தின் பருவமழை ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் இடையே தொடங்குகின்றது. இந்த நேரத்தில் மிதமான மழை மற்றும் குளிர்ச்சியை அனுபவிக்கலாம்.

குளிர்காலம்

(டிசம்பர் - பிப்ரவரி வரை): கத்கோடத்தின் குளிர்காலம் டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் நிலவுகிறது. இந்த நேரத்தில், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 0° C மற்றும் 24 ° C ஆக பதிவாகும்.