காஸிரங்கா தேசிய பூங்கா நவம்பர் முதல் மே மாதம் வரையிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். பிற நாட்களில் பெய்யும் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக இந்த பூங்கா மூடப்பட்டிருக்கும். மழைக்காலம் முடிந்த பின்னர், பருவநிலை மகிழ்ச்சிகரமானதாக இருப்பதால், பெருமளவிலான விலங்குகள் வெளியில் சுற்றித் திரிவதை நம்மால் காண முடியும். எனவே, மழைக்காலம் முடிந்து தொடங்கும் மகிழ்ச்சியான குளிர்காலத்தில் காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு வருவது மிகச்சிறந்த சுற்றுலா அனுபவமாக இருக்கும்.
காஸிரங்காவின் கோடை மாதங்களாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் உள்ளன. மிகவும் வெப்பமான மாதங்களாக கருதப்படும் இந்த மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் ஆகியவை இருக்கும். இந்நாட்களில் வறட்சியாகவும், அனல் காற்று வீசுவதாகவும் இருக்கும். மே மாதங்களில் மிருகங்கள் சுற்றித் திரிவதை காண இயலும்.
பெருமழையைக் கொண்டு வரும் மழைக்காலத்தில் இந்த தேசிய பூங்காவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும். காஸிரங்காவின் மழைக்காலம் ஜுன், ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிலவி வருகிறது. இந்நாட்களில் சராசரி வருடாந்திர மழைப்பொழிவாக 222 மிமீ பெறுவதால், இந்த பூங்கா மூடப்பட்டிருக்கும். இந்நாட்களில் இந்த தேசிய பூங்கா 5 முதல் 10 நாட்கள் தொடர்ச்சியாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்.
நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் காஸிரங்காவின் குளிர்கால மாதங்களாகும். இந்நாட்களில் நிலவும் வெப்பநிலையாக 5 முதல் 30 டிகிரி செல்சியஸ் உள்ளது. இந்நாட்களில் பருவநிலையும் மிதமானதாக இருப்பதால், பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் பருவமாக குளிர்காலம் உள்ளது. இந்த காலம் தான் இந்த தேசிய பூங்காவிற்கு மிகவும் முக்கியமான சுற்றுலாப் பருவமாகும்.