Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கேதார்நாத் » வானிலை

கேதார்நாத் வானிலை

மே மற்றும் அக்டோபர் மாதங்கள் கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளன. இக்காலத்தில் குளுமையான இதமான சூழல் நிலவுகிறது. நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு இடைப்பட்ட பருவத்தில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் பயணிகள் கடுமையான குளிருக்கான பிரத்யேக ஆடைகளுடன் பயணிப்பது நல்லது.  

கோடைகாலம்

(மே முதல் ஆகஸ்ட் வரை) : கேதார்நாத் பகுதியில் மே மாதம் கோடைக்காலம் துவங்குகிறது. இக்காலத்தில் இப்பகுதியின் சீதோஷ்ணநிலை மிதமானதாக காணப்படுகிறது. சராசரியாக 17°C வெப்பநிலை இக்காலத்தில் காணப்படும். இந்த கோடைக்காலமே கேதார்நாத் கோயிலுக்கு விஜயம் செய்ய ஏற்ற பருவமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலம்

 (செப்டம்பர் முதல் அக்டோபர் வரை) : கேதார்நாத் பகுதியில் மழைக்காலம் செப்டம்பர் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை நீடிக்கிறது.  இக்காலத்தில் சராசரியாக 12°C வெப்பநிலை காணப்படும். மழைக்காலத்திலும் பயணிகள் கேதார்நாத்துக்கு விஜயம் செய்யலாம்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் ஏப்ரல் வரை) : கேதார்நாத் பகுதியில் நவம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை குளிர்காலம் நீடிக்கிறது. சாதாரணமாக 5°C வரை வெப்பநிலை நிலவினாலும் 0°C க்கும் கீழே வெப்பநிலை குறையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடும் பனிப்பொழிவும் இக்காலத்தில் காணப்படுகிறது.