Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கீழ்பெரும்பள்ளம் » வானிலை

கீழ்பெரும்பள்ளம் வானிலை

அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதத்திற்கு இடையிலான காலகட்டமே இங்கு வருகை தருவதற்கு சிறந்த காலம். இந்த மாதங்களில் வானிலை சற்று இனிமையானதாகவும், அதிக உஷ்ணமும், அதிக குளிர்ச்சியும் இல்லாமல் இருக்கின்றது. இந்த மாதங்களில் வெயில் அதிகமாக இருக்காது என்பதால், பயணமும் இனிமையாக இருக்கும். எனினும், இரவு நேர குளிர்ச்சியில் இருந்து உங்களை பார்த்துக்கொள்வதற்காக, கம்பளி ஆடைகளை எடுத்து வருவது நல்லது.

கோடைகாலம்

இக்கிராமத்தில் கோடைக்காலம் உஷ்ணமாகவும், ஈரப்பதம் நிறைந்ததாகவும் இருக்கிறது. அதிகபட்ச தட்பவெப்பம் 32-35 டிகிரி செல்சியசாக இருக்கிறது. மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரம், மே மற்றும் ஜூன் மாதம் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. மே மாதமே அதிக உஷ்ணமானதாக இருக்கிறது. மே மாத வெயில்  ஈரத்தன்மையை போக்குவதாகவும், சூட்டினால் வலிப்பை உருவாக்குவதாகவும் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் இந்த கிராமத்திற்கு செல்வது பரிந்துரைக்கப்படுவது இல்லை.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் மழைக்காலம் தொடங்குகின்றது. இவ்விடத்தில் மிதமானது முதல் புயலுடன் கூடிய பலத்த மழைப்பொழிவு ஏற்படுகின்றது. காற்றின் வேகத்தை பொறுத்து சூறாவலியும் உருவாகின்றது. ஏப்ரல்  முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் நீடிக்கிறது, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் குறைவான மழைச்சாரல்கள் ஏற்படுகின்றன.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்க்காலம் நீடிக்கிறது, இதில் ஜனவரி மாதம் மிகவும் குளிர்ச்சியானதாக கருதப்படுகின்றது. எனினும், இக்காலகட்டத்தில் தட்பவெப்பம் 20 டிகிரி செல்சியசுக்கு கீழ் குறைவதும் இல்லை, 25 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகரிப்பதும் இல்லை. எனவே, இந்த காலகட்டத்தில் வானிலை சற்று இனிமையாக இருக்கின்றது.