ஹெப்பி அருவி, கெம்மனகுண்டி

கெம்மனகுண்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் காப்பித் தோட்டத்துக்கு மத்தியில் அமைந்திருக்கும் ஹெப்பி அருவியின் அழகை கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். இந்த அருவி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பெரிய பகுதி தொட்டா ஹெப்பி என்றும், சிறியது சிக்கா ஹெப்பி என்றும் அழைக்கப்படுகிறது.இதில் நீராடுபவர்களுக்கு தோல் நோய் சம்பந்தமான நோய்கள் குணமாகுமேன்று சொல்லப்படுகிறது.

 

மேலும் சாகசத்தில் ஆர்வமுள்ளவர்கள், கெம்மனகுண்டியிலிருந்து செல்லும் குறுகிய பாதைகளில் நடைபயணமாக சென்று ஹெப்பி அருவியை அடையலாம். அதோடு அருவிக்கு செல்ல நிறைய ஜீப்களும் இங்கே கிடைக்கும்.

Please Wait while comments are loading...