Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்டாலா » வானிலை

கண்டாலா வானிலை

கண்டாலாவின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதுமே பயணிகளை வரவேற்கும் வகையில் இனிமையாக உள்ளது. ஆகவே வருடத்தின் எந்த நாளிலும் இங்கு விஜயம் செய்யலாம். என்றாலும் அக்டோபர் மற்றும் மே மாதத்துக்கு இடைப்பட்ட காலம் சுற்றுலாவுக்கு உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் கண்டாலாவின் பருவநிலை இதமாக காணப்பட்டு மஹாராஷ்டிராவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக பிரசித்தமாக அறியப்படுகிறது.

கோடைகாலம்

ஏப்ரம் மாதம் முதல் ஜூன் வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் பெரும்பாலும் கண்டாலா பகுதி மிதமான வெப்ப நிலையைக் கொண்டதாக உள்ளது. அச்சமயம் வெப்பநிலை அதிகபட்சம் 320C ஆகக் காணப்படுகிறது.

மழைக்காலம்

ஜுன் மத்தியில் இருந்து செப்டம்பர் மாதம் வரை கண்டாலா மலை வாசஸ்தலம் கடுமையான தென்மேற்கு பருவ மழையைப்பெறுகிறது. இப்பருவத்தில் பயணிகள் கண்டாலாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி வரை காணப்படும் குளிர்காலத்தில் கண்டாலா மலைஸ்தலத்தின் வெப்பநிலை மிகவும் குறைந்து குளிருடன் காணப்படுகிறது. வெப்பநிலை குறைந்த பட்சமாக 120C என்ற அளவில் இருந்தாலும் அதிகபட்சமாக 320C வரை காணப்படுகிறது.