கிம்சார் கிராமத்தின் புகழ்பெற்ற சுற்றுலா அம்சமான கிம்சார் கோட்டையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் சாண்ட் டியூன்ஸ் வில்லேஜ் என்ற பாரம்பரிய ஹோட்டல் அமைந்திருக்கிறது.
இந்த பாரம்பரிய ஹோட்டல் செயற்கை மணற்குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு வரும் பயணிகள் இதன் அருகாமையில் உள்ள அழகிய குளத்திற்கு அருகில் கேம்ப் ஃபயர் போன்ற கேளிக்கைகளில் ஈடுபடலாம்.
அதே நேரத்தில் இந்த குளத்தருகே நிலா வெளிச்சத்தில் இரவு உணவு உண்ணும் அனுபவம் மிகவும் அலாதியானது. மேலும் சுற்றுலாப் பயணிகள் ஜீப் அல்லது ஒட்டக சவாரி செய்து தங்கள் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.



Click it and Unblock the Notifications