பிதனூர் கோட்டை என்றும் பிரசித்தமாக அறியப்படும் இந்த நகரா கோட்டையை கொடசத்ரிக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் பார்ப்பது அவசியம். கொடசத்ரி மலைகளிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இந்த நகரா கோட்டை அமைந்துள்ளது.
கேலடி ராஜவம்சத்துக்கு சொந்தமான இந்த கோட்டை 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையில் சில பகுதிகள் சிதிலமடைந்தும் சிலபகுதிகள் செங்கற்களால் செப்பனிடப்பட்டும் காணப்படுகிறது.
இந்த கோட்டையில் சிவப்ப நாயக்கரின் தர்பார் மண்டபத்தின் சிதிலமடைந்த மிச்ச அடித்தள அமைப்பினை காணலாம். ஒரு வறண்ட கிணறையும், ஆபத்து காலங்களில் ராஜ குடும்பத்தினர் தப்பிக்க உருவாக்கப்பட்டிருந்த ஒரு குகைப்பாதையையும் கூட இங்கு பார்க்க முடிகிறது.
ஒரு உயரமான மேடை அமைப்பின்மீது இந்த கோட்டை அமைந்துள்ளதால் இதிலிருந்து சுற்றிலுமுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் பிரம்மாண்ட அழகை ரசிக்க முடிகிறது.



Click it and Unblock the Notifications