Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோலார் » ஈர்க்கும் இடங்கள் » கோலார் பெட்டா அல்லது கோலார் மலை

கோலார் பெட்டா அல்லது கோலார் மலை, கோலார்

27

பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய ஒன்றான இந்த கோலார் மலை கோலார் நகரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் ‘சதஸ்ரிங்க பர்வதம்’  (நூறு சிகரங்களை கொண்டது எனும் பொருளில்)  என்று அழைக்கப்ட்ட இந்த மலை பயணிகள் சிற்றுலா செல்வதற்கு மிக ஏற்றதாக அமைந்துள்ளது. கோலார் சிகரத்தின் உச்சியிலிருந்து ஒரு பெரிய பீடபூமிப் பகுதியை பார்த்து ரசிக்க முடியும்.‘அந்தர கங்கே’ என்று பிரசித்தமாக அழைக்கப்படும் வற்றாத ஊற்று ஒன்று இந்த மலையின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பசவா என்று அழைக்கப்படும் எருதுச்சிலையின் வாய்ப்பகுதியிலிருந்து நீர் ஊற்று வருவதை சுற்றுலா பயணிகள் காணலாம்.

எப்போதுமே வற்றாமல் வருடம் முழுவதுமே இந்த நீரூற்று சுரப்பது ஒரு அதிசயமாக கருதப்படுகிறது. உள்ளூர் மக்களால் இந்த நீர் புனிதத்தன்மை உடையதாக கருதப்படுகிறது. ஐதீக நம்பிக்கைகளின் படி புனித ஆறான கங்கை இந்த நீருற்றாக இப்பகுதியில் வெளிப்படுவதாக நம்பப் படுகிறது. அதனாலேயே இது அந்தர கங்கை என்று அழைக்கப்படுகிறது.

அந்தர கங்கை நீருற்றை ஒட்டி  ஒரு சிவன் கோயிலும் உள்ளது. கோலார் பெட்டாவில் உள்ள அந்தர கங்கே’யை அடைய சுற்றுலா பயணிகள் 350லிருந்து 500 படிகளை ஏறிச்செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். இருப்பினும் தற்சமயம் சுலபமாக மேலே ஏறுவதற்காக மற்றொரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jul,Mon
Return On
21 Jul,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Jul,Mon
Check Out
21 Jul,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Jul,Mon
Return On
21 Jul,Tue