Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» நந்திக் குன்று

நந்திக் குன்று - வரலாறு விட்டுச்சென்ற சொர்க்கம்

63

பெங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 4851 அடி உயரத்திலும் இயற்கையின் வரப்பிரசாதமாய் நந்திக் குன்று அமைந்துள்ளது. சிக்கபல்லப்பூர் மாவட்டத்தில் இருக்கும் நந்திக் குன்று பெங்களூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகிலேயே இருப்பதால்  பயணிகள் எளிதாக இந்த சுற்றுலாத் தலத்தை அடையலாம்.

வரலாற்றோடு பிணைந்திருக்கும் அழகு

நந்திக் குன்று சுவையான வரலாற்று நிகழ்வுகளை கொண்டதோடு,  மரபு சார்ந்த மர்மங்களுக்கும் உறைவிடமாய் திகழ்கிறது. சிலர்,  நந்திக் குன்று பார்ப்பதற்கு தூங்கும் எருது போல் காட்சியளிப்பதால் அதற்கு அப்பெயர் வந்ததாக கூறுவர்.

சோழப் பேரரசின் ஆளுகையில் நந்திக் குன்று இருந்த போது  அனந்த கிரி என்ற பெயருடன் அது விளங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது நந்திக்குன்றில், சோழ கட்டிட கலைக்கே உரித்தான பாணியில் கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

சுதந்திர போராட்ட காலத்தில்  இங்கு நந்தி துர்கா என்ற பெயரில் திப்பு சுல்தானால் கோட்டை ஒன்று கட்டப்பட்டது . எவராலும் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்ந்த அந்த கோட்டை 1791-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.

நந்திக் குன்றுக்கு வரும் போது திப்பு சுல்தானின் கோடை கால வாசஸ்தலம், திப்புவின் வீழ்ச்சி, அவர் தப்பிச்சென்ற ரகசிய வழி போன்ற இடங்கள் வரலாற்றை நம் கண்முன் கொண்டு வருவதோடு, மறக்க முடியாத அனுபவமாகவும் இருக்கும்.

இவை தவிர கவி வீரபத்திர கோயில், அம்ரிதா சரோவர் ஏரி, தோட்டக்கலை பூங்கா உள்ளிட்ட இடங்களும் பயணிகளின் ரசனைக்கு விருந்தளிக்க கூடியவை. அதே போல் பேராக்ளைடிங், மிதிவண்டி பயணம் போன்றவைகளும் பயணிகளுக்கு பேரனுபவமாக அமையும்.

நந்திக் குன்று சிறப்பு

நந்திக் குன்று வானிலை

சிறந்த காலநிலை நந்திக் குன்று

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நந்திக் குன்று

  • சாலை வழியாக
    சாலை வழியாக பெங்களூரிலிருந்தும், சிக்கபல்லப்பூரிலிருந்தும், நந்தி கிராமாவிலிருந்தும் நந்திக் குன்றுக்கு அடிக்கடி அரசுப் பேருந்துகள் சென்று கொண்டிருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி நந்திக் குன்றை அடையலாம்.நந்திக் குன்றுக்கு செல்ல பேருந்து மூலமாக பெங்களூரிலிருந்து 2 மணி நேரமும்,சிக்கபல்லப்பூரிலிருந்து 1 மணி நேரமும் ஆகும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சிக்கபல்லப்பூர் ரயில் நிலையம் நந்திக் குன்றிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வாடகை கார்களை அமர்த்தி கொண்டு நந்திக் குன்று வரலாம். அதுமட்டுமல்லாமல் பெங்களூர் ரயில் நிலையத்திற்கு இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் அடிக்கடி ரயில் போக்குவரத்து இருப்பதால் பெங்களூர் வந்து பின் சிக்கபல்லப்பூரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நந்திக் குன்றிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம் இருப்பதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எந்த சிரமமுமின்றி நந்திக் குன்றை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri