கோலார் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இந்த சோமேஸ்வரர் கோயில் ஆகும். சிவனின் அவதாரமான சோமேஸ்வரருக்காக கோலார் நகரின் மையத்தின் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்மீக புனித ஸ்தலம் 14ம் நூற்றாண்டில் விஜய நகர கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலிலுள்ள கல்யாண (உற்சவ) மண்டபம் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை கொண்டுள்ளது.
இந்த வேலைப்பாடுகள் சீன, ஐரோப்பிய மற்றும் தாய்லாந்து போன்ற பல்வேறு சிற்பக்கலை பாணிகள் கலந்து காணப்படுகின்றன. கல்யாண மண்டபத்தின் மேற்பகுதி சீன சிற்பக்கலை பாணியில் காணப்படுகிறது.
விஜய நகர சாம்ராஜ்யத்தின் காலத்தில் வெளிநாட்டு உறவுகளும் போக்குவரத்தும் சிறப்பக இருந்ததற்கு சான்றாக இந்த கலவையான கலையம்சத்தை கொண்டுள்ள கோயில் விளங்குகிறது.



Click it and Unblock the Notifications