Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொல்லூர் » வானிலை

கொல்லூர் வானிலை

கொல்லூரின் இயற்கை அழகை ரசிக்கவும், அங்குள்ள கோயில்களை சுற்றிப் பார்க்கவும் பயணிகள் அக்டோபரிலிருந்து, மார்ச் வரையிலான காலங்களில் சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும். அதோடு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களின் இடைப்பட்ட காலங்கள், கொல்லூருக்கு சிற்றுலா வர விரும்பும் பயணிகளுக்கு ஏற்றதாக அமையும்.

கோடைகாலம்

( மார்ச் முதல் மே வரை): கோடைக்காலத்தில் கொல்லூர் மிக அதிகமான வெப்பத்துடன் காணப்படுகிறது. பகல் பொழுதில் வெப்பநிலை 40° C ஆகவும் இரவில் 25° C ஆகவும் காணப்படும். அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக சுற்றுலாப்பயணிகள் கோடைக்காலத்தில் இங்கு விஜயம் செய்வதை விரும்புவதில்லை.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : மழைக்காலத்தில் கொல்லூர் ஸ்தலம் மிக அதிகமான மழைப்பொழிவை பெறுகிறது. ஈரப்பதமும் இக்காலத்தில் அதிகமாகவே காணப்படுகிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): குளிர்காலத்தின் போது கொல்லூர் பகுதியில் பருவநிலை குளுமையாகவும் இனிமையாகவும் உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 14° C ஆகவும் குறைந்தபட்சமாக 32° C ஆகவும் காணப்படும். குறைந்த ஈரப்பதத்துடன் இனிமையான சூழலைத்தரும் குளிர்காலத்தில் இங்கு விஜயம் செய்ய பயணிகள் விரும்புகின்றனர்.