அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட பருவம் கோட்டா நகருக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் பருவநிலை குளுமையான மற்றும் இனிமையான சூழலுடன் காணப்படுகிறது.
(மார்ச் முதல் ஜூன் வரை): கோட்டா பிரதேசத்தில் மார்ச் மாதத்தில் துவங்கி ஜுன் வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்சம் 30° C முதல் அதிகபட்சமாக 43° C வரை வெப்பநிலை நிலவுகிறது.
(ஜுலை முதல் செப்டம்பர் வரை): கோட்டா பிரதேசம் ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் மழைக்காலத்தைப் பெறுகிறது. இக்காலத்தில் கடுமையான ஈரப்பதம் கொண்ட் பருவநிலை நிலவுகிறது.
(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): கோட்டா பிரதேசத்தில் நவம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கின்றது. இக்காலத்தில் பருவநிலை குளுமையான மற்றும் இனிமையான சூழலுடன் காணப்படுகிறது. சராசரி வெப்பநிலை 11° C முதல் 25° C வரை நிலவுகிறது.