மழைக்காலம் தவிர்த்து மற்ற எல்லா மாதங்களும் கோட்காயீ நகருக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்தவையாக உள்ளன.
(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : கோட்காயீ சுற்றுலாத்தலத்தில் ஏப்ரல் தொடங்கி ஜூன் இறுதி வரை கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 28°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 15°C வெப்பநிலையும் நிலவுகிறது. மே மாதத்தில் இங்கு சற்று அதிக உஷ்ணம் நிலவுகிறது. இனிமையான சூழல் நிலவுவதால் கோடைக்காலத்தில் இங்கு விஜயம் செய்வதை பயணிகள் விரும்புகின்றனர்.
( ஜூலை முதல் செப்டம்பர் வரை) : கோட்காயீ சுற்றுலாத்தலத்தில் ஜூலை துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் நிலவும் மழைக்காலத்தில் தென்மேற்கு பருவ மழைப்பொழிவு காணப்படுகிறது. இக்காலத்தில் ஈரப்பதம் சற்றும் அதிகமாக இருந்தாலும் இரவில் வெப்பநிலை குறைந்து குளுமையாக காணப்படும்.
( நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : கோட்காயீ சுற்றுலாத்தலத்தில் நவம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 15°C முதல் குறைந்தபட்சமாக 4°C வரை வெப்பநிலை நிலவுகிறது.