Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிருஷ்ணகிரி » வானிலை

கிருஷ்ணகிரி வானிலை

வருடத்தின் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவதொரு நல்ல விஷயத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கும் இடமான கிருஷ்ணகிரிக்கு வருடத்ததின் எந்த நாட்களிலும், பருவத்திலும் வரலாம். மாம்பழங்கள் அறுவடை செய்யப்படும் கோடைக் காலங்களில் கிருஷ்ணகிரிக்கு வருவது சிறப்பானது. எனினும் இந்த நாட்களில் கிருஷ்ணகிரி பெற்றுள்ள வெப்பநிலை பயமுறுத்துவதாக இருக்கும். எனவே, மழைக்காலத்திற்குப் பிறகு வரும், அதாவது நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் மழையால் பசுமையாக காட்சியளிக்கும் கிருஷ்ணகிரிக்கு சுற்றுலாப் பயணம் செய்வது மனதை மகிழச் செய்யும் அனுபவத்தைத் தந்திடும்.

கோடைகாலம்

மிதமான பருவநிலையை கோடைக்காலங்களில் சந்திக்கும் கிருஷ்ணகிரியில் குறைந்த பட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் அதிக பட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸாக இருக்கும். கோடைகாலங்களில் ஏற்படும் வறண்ட பருவநிலை கிருஷ்ணகிரியை வெப்பமான மற்றும் வசதியற்ற இடமாகவே காட்டும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிகவும் அதிகமான வெப்பத்தைப் பெறும் கிருஷ்ணகிரிக்கு கோடைக்காலங்களில் சுற்றுலா வருவது சிறந்தது அல்ல.

மழைக்காலம்

ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் கிருஷ்ணகிரி அபரிமிதமான மழைப்பொழிவைப் பெறும். மழை மட்டும் இல்லாதிருந்தால் போதும், மிகவும் அற்புதமான மகிழ்ச்சிகரமான பருவநிலையைப் பெற்றிருக்கும் கிருஷ்ணகிரி நகரத்தை இந்த காலங்களில் நன்றாக சுற்றிப் பார்க்க முடியும். நீண்ட நாட்கள் மழைப்பொழிவைப் பெறும் கிருஷ்ணகிரி நகரத்திற்கு மழை வராத இடைக்காலங்களில் சென்று வருவது நல்ல அனுபவத்தைத் தரும்.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில் கிருஷ்ணகிரியை ஒரு சொர்க்கம் என்று சொன்னால் மிகையாகாது. மகிழ்ச்சியைத் தரும் வெப்பமும், மனதை வருடும் இளவெயில் கதிர்களும் நிரம்பிய குளிர்காலம் கிருஷ்ணகிரி நகரை சுற்றிப் பார்க்க மிகவும் ஏற்ற காலமாகும். இந்த நாட்களில் கிருஷ்ணகிரியில் வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும்.