மழைக்காலம் முடிந்தவுடன் துவங்கும் குளிர்காலமே கர்னூல் நகரத்துக்குசுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களை உள்ளிட்ட இப்பருவம்இனிமையான இதமான சூழலுடன் காட்சியளிப்பதால் சுற்றுலா செயல்பாடுகளுக்கு மிகவும் ஏற்றதாகும்.
கர்னூல் நகரப்பகுதியில்மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் ஜூன் மே மாதம் வரை நீள்கிறது. கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் இக்காலத்தில் நிலவுகிறது. சராசரியாக இக்காலத்தில்23° C முதல் 42° C வரை வெப்பநிலை காணப்படுகிறது. அதிக உஷ்ணம் காரணமாக அசௌகரியத்தை தரக்கூடிய கோடைக்காலத்தில்கர்னூல் நகரத்துக்குசுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
மழைக்காலத்தில் கர்னூல் நகரப்பகுதியில் கடுமையான மழைப்பொழிவு நிலவுகிறது. இங்குஜுலை மாதத்தில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீள்கிறது. மழைக்காலம் இப்பகுதியின் வெப்பநிலையை குறைக்கவும் செய்கிறது. மழைக்காலத்தில் கர்னூல் நகரத்திற்கு பயணம் மேற்கொள்பவர்கள் அதிக மழைப்பொழிவிற்கு தயாராக செல்வது நல்லது.
டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரைகர்னூல் நகரப்பகுதியில்குளிர்காலம் நீடிக்கிறது. இனிமையான இதமான சூழலை கொண்டுள்ளகுளிர்காலத்தில் சராசரியாக 20° C முதல் 30° C வரை வெப்பநிலைநிலவுகிறது. நடுங்க வைக்கும் குளிர் நிலவுவதில்லை. மிதமான பருவநிலை காணப்படும் இந்த குளிர்காலம்கர்னூல் நகரத்துக்கு விஜயம் செய்ய உகந்ததாக உள்ளது.