நந்தேட் நகரத்திலிருந்து லாதூர் செல்லும் வழியில் இந்த சாக்கூர் அமைந்திருக்கிறது. இது இங்குள்ள சிவன் கோயிலுக்கு புகழ் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்கு பல அரிய மூலிகைகள் மற்றும் மருந்து தாவரங்கள் கிடைக்கின்றன.
லாதூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்துக்கு சாலை மார்க்கமாக 30 நிமிடங்களில் வந்து விடலாம். குழந்தைகளோடு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இங்குள்ள ஒரு உல்லாசப்பொழுது பூங்காவுக்கும் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications